சூடான செய்திகள் 1

நடுவானில் தடுமாறிய விமானம்:நிலை பதட்டமடைந்த விமானிகள் (video)

(UTV|COLOMBO)- கனடாவின் வான்குவரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு ஏர் கனடா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 269 பயணிகளும், 15 விமான ஊழியர்களும் இருந்தனர்.

ஹவாய் தீவுக்கு மேலே 36 ஆயிரம் அடிக்கும் மேலாக பறந்துக் கொண்டிருந்தது. அப்போது காலநிலை மிகவும் மோசமானதாக இருக்கவே, திடீரென விமானம் குலுங்கியது. இதனால் பயணிகள் மிகுந்த பதற்றம் அடைந்தனர்.

விமானம் வேகமாக குலுங்கியதால் விமான ஊழியர், பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் பயணம் செய்த 37 காயமடைந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Related posts

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மெத்தியூஸ்