சூடான செய்திகள் 1

தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நிதி மோசடி!

 

(UTV|COLOMBO)- தொழில் வாய்பு பெற்றுதருவதாக கூறி, ஜனாதிபதி செயலகத்தின் கடிதம், பிரதமரின் கடிதம் மற்றும் மின்சார சபையின் கடிதம் ஆகியவற்றை போலியான முறையில் தயாரித்து, தொழில் வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 225,000 ரூபா பண மோசடி செய்த சந்தேக நபரை நேற்று ஹட்டன் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

இலங்கை பேருந்து சபையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளார்.

குறித்த நபர் யுவதி ஒருவருக்கு தொழில் வாய்பு பெற்றுதருவதாக கூறி, இது போன்ற போலியான ஆவணங்களை தாமே தயாரித்து ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாக, குறித்த யுவதி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

இதற்கு அமைய ஹட்டன் பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் கைது செய்யபட்டுள்ளார்.

Related posts

“ரணில்- ராஜபக்‌ஷக்களுக்கிடையிலான சந்திப்பு விரைவில்….!

நாட்டில் உள்ள மக்களுக்கான ஓர் அவசர செய்தி…

பறவைகளால் விமானம் தரையிறக்கம்