(UTV|COLOMBO)- நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சீர்த்திருத்தப்பட்ட விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யாத, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் பெற்றோல் 92 ஒக்டேன் விலை 2 ரூபாவாலும், ஒக்டேன் 95 இன் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டதுடன், சுப்பர் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது. எனினும் சில எரிபொருள் விற்பனை நிலையங்கள் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜீ.எஸ். விதானகே தெரிவித்துள்ளார்.