சூடான செய்திகள் 1

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று கூடி தீர்மானிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இது குறித்து எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சி செயற்படும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி கூறினார்.

Related posts

பிறவியிலேயே கையை இழந்த மாணவிக்கு ஜனாதிபதியினால் செயற்கை கை அன்பளிப்பு

பாதீடு தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில்

வெளிப்பென்ன நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டது