சூடான செய்திகள் 1

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு பிணை

(UTV|COLOMBO)-  விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு தவறியக் குற்றச்சாட்டின் கீழ், கடந்த 3ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

Related posts

24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை-360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்கு முடக்க நடவடிக்கை

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சபாநாயகரின் தீர்மானம்

பலமான காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும்