சூடான செய்திகள் 1

இறுதிக்கட்டத்தை எட்டியது தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகள்

 

(UTV|COLOMBO)-  தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிர்மாண செயற்றிட்டத்தின் இறுதிக்கட்ட மேற்பார்வை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக செயற்றிட்ட ஆலோசகர் பேராசிரியர் சமித்த மானவடு தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமான இந்த செயற்றிட்டம் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த கோபுரத்தின் உயரம் 356 மீற்றர்களாகும்.

இந்த கோபுரத்தின் கீழ்மட்ட மூன்று மாடிகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள எட்டு மாடிகளில் இரண்டு மாடிகள் களியாட்ட நிகழ்வுகளுக்கும் தொலைத்தொடர்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாடியிலும் சுமார் 400 பேர் உள்ளடங்கக்கூடிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

சித்திரை புத்தாண்டு புண்ணியகாலம்…