(UTVNEWS | COLOMBO) – ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால், பதிலுக்கு இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் சிறை பிடிக்கப்படும் என ஈரான் நாட்டு படைகளின் மூத்த தளபதி ட்விட்டர் தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளமை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி, ஈரானின் எண்ணெய் கப்பலான சூப்பர்டேங்கர் கிரேஸ் 1, சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக, கிப்ரால்டர் கடற்பகுதியில் வைத்து இங்கிலாந்தின் ராயல் மரைன்ஸ், அந்த கப்பலை சிறைப்பிடித்திருந்தது.
இந்நிலையில் ஈரானின் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதற்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கப்பல் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் நாட்டு படைகளின் மூத்த தளபதி மொக்சென் ரேசாய், ‘ஈரானின் எண்ணெய் கப்பலை இங்கிலாந்து விடுவிக்காவிட்டால், இங்கிலாந்தின் எண்ணெய் கப்பலை சிறைபிடிக்க வேண்டியது, ஈரான் அதிகாரிகளின் கடமை’ என குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.