சூடான செய்திகள் 1

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – இறக்குவானை கோரளைகம பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர்(42) கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதன் போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று, டி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 434 கிராம் வெடி மருந்து உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்று(06) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

பெற்றோல், டீசலின் விலை குறைப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]