சூடான செய்திகள் 1

1,475 சிம் அட்டைகள் தொடர்பில் காவல்துறை விசேட விசாரணை

(UTV|COLOMBO) மாஓயாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் – நீர்கொழும்பு கொச்சிக்டை பகுதியில் மீட்கப்பட்ட ஆயிரத்து 475 சிம் அட்டைகள் தொடர்பில் காவல்துறை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மாஓயாவில் மீன்பிடிக்க சென்ற இளைஞர்கள் சிலர் நேற்றைய தினம் இந்த சிம் அட்டைகள் பையொன்றில் இடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

அந்த சிம் அட்டைகள் இதுவரை பயன்படுத்தப்படாத நிலையில், எதற்காக மறைத்து வைக்கப்பட்டது தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை.

 

Related posts

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்கள் உடைப்பு,பொலீஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி