(UTV|COLOMBO) – பேஸ்புக், இன்ஸ்ட்கிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் உலகளாவிய ரீதியில் நேற்று(03) ஏற்பட்டிருந்த தடங்கல் நிலைமை சீர்செய்யப்பட்டு சமூக வலைதளங்களது செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பேஸ்புக், இன்ஸ்ட்கிராம், வட்ஸ்அப் முதலான சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதில் நேற்று(03) நள்ளிரவு முதல் உலகளாவிய ரீதியில் தடங்கல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.