சூடான செய்திகள் 1

பயண தடையை நீக்கிய ஜப்பான்

(UTV|COLOMBO) – ஜப்பான் இலங்கைக்கு எதிரான விதித்திருந்த சுற்றுலா பயண ஆலோசனை தடையை நீக்கியுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் ஜப்பான் தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரிக்கும் வகையில் இந்த பயண ஆலோசனை தடை விதிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலான விடயங்களை கவனத்திற் கொண்டு இந்த தடையில் தளர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் அரசாங்கம் விதித்திருந்த சுற்றுலா பயண ஆலோசனை தடை –Level I ஐ இல் தளர்வு ஏற்படுத்தி இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

Related posts

டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்

நாளை முதல் நாட்டில் ஏற்படப்போகும் மாற்றம்…

சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது