வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது

(UTV|COLOMBO)  இன்றும் நாளையும் ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்கியது.

அப்போது, ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியாக வரவேற்று மேடைக்கு அழைத்தார். அவர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர், அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். புகைப்படம் எடுத்து முடிந்ததும் மாநாட்டின் முதல் அமர்வு தொடங்கியது. தலைவர்கள் ஒவ்வொருவராக உரையாற்றினர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசும் போது, ஜி20 நாடுகளின் தலைவர்கள் வர்த்தகத்திற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பேசினார். வர்த்தக பாதுகாப்புவாதம் அதிகரித்து வருவதை சீன தலைவர் கடுமையாக எச்சரித்தார்.

அதேபோல் உலகளாவிய வர்த்தகத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாகவும், தடையற்ற, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற வர்த்தகத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் ஜப்பான் பிரதமர் வலியுறுத்தினார்.

 

 

 

Related posts

அனர்த்தத்தினால் கடவுச்சீட்டுக்களை இழந்தோர் விண்ணப்பிக்க முடியும்

CID Director lodges complaint against lawyer Manoj Gamage

இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக – அமைச்சர் றிசாட்