சூடான செய்திகள் 1

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV|COLOMBO)  வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாட்சியங்களை வேண்டுமென்றே மறைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவை 20 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்போது கொழும்பு நீதவான் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூபாவான ரொக்கப் பிணையை மேல் நீதிமன்றத்தின் பிணையாக ஏற்பதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பிரதிவாதியின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு

கஞ்சிபான இம்ரான் விமான நிலையத்தில் வைத்து சிஐடி யினால் கைது

ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரையும் சந்திக்க மாட்டேன் – மெல்கம் ரஞ்சித்