சூடான செய்திகள் 1

ஒஸ்மன் குணசேகர மற்றும் அவரது மனைவி கைது

(UTV|COLOMBO)  நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கணவனும் மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கம்பஹா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

63 வயதுடைய ஒஸ்மன் குணசேகர மற்றும் 53 வயதுடைய அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதுடன், துப்பாக்கி தோட்டாக்கள் 46 வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட ஒஸ்மன் குணசேகர கடந்த ஆண்டு பெப்ரவரியில், நெதகமுவ கொட்டுகொட பிரதேசத்தில் வைத்து பஸ் சமீ என்பவரை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் ​மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவர் கடமைகள் பொறுப்பேற்பு

பிணை வழங்க கோரி மிள்பரிசீலனை மனுத்தாக்கல்