வணிகம்

எயார்டெல் வழங்கும் வரையறையற்ற அழைப்புகள்

(UTV|COLOMBO)  தொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையென பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்க எயார்டெல் லங்கா முன்வந்துள்ளது. ரூ. 98 எனும் விலைக்கு, வரையறையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியைக் கொண்ட புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. தொலைபேசி பாவனையாளார்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பைப் பெறும் ஒரு திட்டமாக இது அமைந்திருக்கும் என துறைசார் ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்திருந்தனர். மேம்படுத்தப்படும் வலையமைப்பு மற்றும் தரம் ஆகியவற்றினூடாக,எயார்டெல் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தினூடாக பெருமளவு பயன்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இலங்கையின் தொலைத்தொடர்பாடல் துறையில் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட எயார்டெல், புத்தாக்கமான மற்றும் பிரத்தியேகமான வாடிக்கையாளர் சேவைகளை வழங்கிய வண்ணமுள்ளதுடன், இத்துறையை தொடர்ந்தும் புரட்சிக்கு உட்படுத்த முயற்சித்த வண்ணமுள்ளது. புதிய தீர்வின் அறிமுகத்துடன், தனது வர்த்தக நாமத்தை பேண எயார்டெல் மீண்டும் முன்வந்துள்ளது.

“கதை பஸ்” (கதா பஸ்) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டமானதுஇ எயார்டெல் வழங்கும் முற்கொடுப்பனவு இணைப்புகளை மேலும் வலிமைப்படுத்தி, வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மை, சௌகரியம் மற்றும் இலகுத் தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதாக அமைந்திருக்கும். இந்த ரீசார்ஜ் பெக்கின் விலை ரூ. 98 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
பார்தி எயார்டெல் லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான ஜினேஷ் ஹெக்டே கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்கள் தமது வேலைப்பளு நிறைந்த வாழ்க்கைக்கு தடங்கலில்லாத இணைப்பைக் கொண்டிருப்பதை எதிர்பார்க்கின்றனர். இந்த புரட்சிகரமான ரீசார்ஜ் பெக் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை எளிமைப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், சகலருக்கும் சிறந்த பெறுமதியை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. பணத்தை சேமித்துக் கொள்ள வாடிக்கையாளர்கள் இனி குரல் அழைப்புகளை தவிர்த்துக் கொள்ள வேண்டியதில்லை.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கையில் ஸ்மார்ட்ஃபோன்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில்இ தமது சாதனங்களிலிருந்து முழுமையான பயனைப் பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்கள் உயர் விலையில் காணப்படும் பிளான்களை தெரிவு செய்ய வேண்டியதில்லை.” என்றார்.
இந்த புதிய பெக்கின் அறிமுகத்துடன், எயார்டெல் வாடிக்கையாளர்கள் தற்போது தமது அன்புக்குரியவர்களுடன், முற்றிலும் இலவசமாக வரையறையின்றி உரையாடி மகிழ முடியும். அதிகளவு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வோருக்கு இந்த பெக் மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும் என்பதுடன், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான எயார்டெலின் உறுதிமொழியை பிரதிபலிக்கும் வகையில், பரிபூரண ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை பெற்றுக் கொடுத்து,வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் இணைந்திருப்பதற்கான உதவியை வழங்குகின்றது.

எயார்டெல் இலக்கங்களுக்கான வரையறையற்ற அழைப்புகளுக்கு மேலாக, ரீசார்ஜ் அட்டையினூடாக 1000 SMS கள் மற்றும் 100 MB டேட்டா வரை 30 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களின் சகல மொபைல் தேவைகளையும் ஒரே ரீசார்ஜ் பெக்கில் இணைக்கும் நோக்கில் இந்த பெக் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதுடன், நம்பகமான சேவைகளை பெற்றுக் கொடுக்கும் தனது உறுதிமொழியை எயார்டெல் லங்கா நிறைவேற்றியுள்ளதுடன், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வழிமுறையை பின்பற்ற எதிர்காலத்திலும் மேலும் பல புத்தாக்கமான தீர்வுகளை அறிமுகம் செய்ய எயார்டெல் லங்கா எதிர்பார்த்துள்ளது. வாடிக்கையாளர்கள் தமது SIM அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கைகளை facebook.com/airtelife இணையப்பக்கத்துக்கு பிரவேசித்து மேற்கொள்ள முடியும்.

ரீசார்ஜ் பெக்களை நாடு முழுவதிலுமுள்ள எந்தவொரு எயார்டெல் ஸ்ரோர்களிலிருந்தும் கொள்வனவு செய்ய முடியும்.

பார்தி எயார்டெல் லங்கா பற்றி

இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் தனது சேவைகளுடன், வர்த்தகத் தொழிற்பாடுகளை ஆரம்பித்த பார்தி எயார்டெல் லங்கா நிறுவனம் (“எயார்டெல்”), அதிவேகமாக 1 மில்லியன் வாடிக்கையாளர்களை எட்டிய நிறுவனம் என்ற பெருமையை நிலைநாட்டியிருந்தது. தொழில்நுட்பவியல் புத்தாக்கம் மற்றும் தலைசிறந்த சேவை ஆகியவற்றை எயார்டெல் லங்கா வழங்கி வருவதுடன், இலங்கையில் இளைஞர், யுவதிகள் மத்தியில் மிக வேகமாக இது பிரபலமடைந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா நிறுவனம், குரல் (Voice)>தரவு (data) மற்றும் நிறுவன தீர்வுகள் (enterprise solutions) உள்ளடங்கலாக டிஜிட்டல் மொபைல் சேவைகளை வழங்கி வருகின்றது. மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள தயவூ செய்து www.airtel.lk என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.

 

Related posts

கொழும்பு மாநகரத்திற்கு அருகில் விசேட அபிவிருத்தித் திட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு [VIDEO]

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இன்று கலந்துரையாடல்