வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தகம் செய்ய சீனா விருப்பம்…

(UTV|COLOMBO)  உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா கடந்த சில காலமாக வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருவதுடன் சீனாவின் ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார்.

இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் மூண்டதுடன் வர்த்தகப்போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அந்நிலையில் , சீனா உடனான வர்த்தகப்போர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:

வர்த்தக போர் காரணமாக சீனாவின் ஏற்றுமதி அளவு கனிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்று விட்டது. ஆனால், பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர அந்நாடு அமெரிக்காவுடன் மீண்டும் சுமுகமான வர்த்தகம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது என இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

டிரம்ப் – கிம் ஜாங் உன் மீண்டும் சந்திப்பு

இங்கிலாந்தில் தீவிரவாதத் தாக்குதல் – பலர் பலி – [VIDEO]

மியன்மாரில் இடம்பெற்ற இனசுத்திகரிப்பு நடவடிக்கைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை –