(UTV|COLOMBO) வங்கி கணக்காளர்களுக்கு பங்குகள் முதலீடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அரசாங்கத்தின் மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக தேசிய பத்தரிகையில் வெளியான செய்தி பொது மக்களை தவறாக வழிநடத்துவதுடன் உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என இவ்வாறு நிதி அமைச்சில் வெளயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
மூலதன குறைபாடு இருப்பதான என்ற போர்வையில் மக்கள் வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சில அரசியல் கட்சிகளும் அவர்களுடன் தொடர்புபட்ட வங்கி தொழிற்சங்க முக்கயஸ்தர்களை மேற்கோள் காட்டி இந்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இருப்பினும் மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தவதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் வலியறுத்தியுள்ளது.
அந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக அமைந்தமை நிதி அமைச்சினால் சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மக்கள் வங்கி திருத்த சட்டமாகும் என்றும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)