சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எனக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை (VIDEO)

(UTV|COLOMBO)  இன்று(26) இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கும் போது முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

மேற்படி அவரது சாட்சியத்தில்;

“ஏப்ரல் மாதம் 26ம் திகதி 2019, இஷான் அஹமட் எனும் நபர் ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அச்சந்தர்ப்பத்தில், எனக்கு சரியாக நினைவில் இல்லை கைது செய்யப்பட்ட நாளா அல்லது மறு நாளா என்று.. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். எனது கைப்பேசி இலக்கத்தினை அனைவரும் நன்கு அறிவர். அமைச்சரை எனக்கு தெரியும். இந்தப் பாராளுமன்றில் உள்ள அமைச்சர்கள் உறுப்பினர்கள் என அநேகமானோரை இராணுவத் தளபதி என்ற முறையில் எனக்குத் தெரியும். பொதுமகன் என்ற ரீதியிலும் தெரியும். அதனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னுடன் கதைக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் மட்டுமில்லாது வேறு தேவைகளுக்கும் என்னை தொடர்பு கொள்கிறார்கள்.

அன்றைய தினம் என்னை தொடர்பு கொண்டு அமைச்சர் ரிஷாத், கைதான குறித்த நபரின் பெயரினை கூறி கைது செய்யப்பட்டதா? என வினவினார். அப்போது நான் கூறினேன் எனக்கு உறுதியாக கூற முடியாது. நாடளாவிய ரீதியில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நான் அது தொடர்பில் ஆராய்ந்து, உங்களுக்கு அறியப்படுத்துகிறேன் எனக் கூறினேன்.

இரண்டாவது தடவையும் என்னை தொடர்பு கொண்டார். அப்போது நன் கூறினேன் இன்னும் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன. எனக்கு உறுதியாக கூற முடியவில்லை என்றேன். எனினும் நான் இது தொடர்பில் பின்னர் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் வினவ கைது செய்யப்பட்டமை உறுதி என்பதை அறிந்தேன். மீண்டும் மாலை அமைச்சர் என்னை தொடர்பு கொண்ட போது நான் கூறினேன் ஆம் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறினேன். இரண்டு வருடத்திற்கு பின்னர் என்னை தொடர்பு கொள்ளுமாறு நான் கூறியதாவது கைது செய்யப்பட்ட நபரை பொலிசாரிடம் கையளித்த பின்னர் சுமார் 1 1/2 வருடங்கள் விசாரணைக்கு உட்படுத்த அதிக வாய்ப்புக்கள் உள்ளது அதனால் தான் அவ்வாறு தெரிவித்தேன். இது நம்மிருவருக்கும் இடையே நடந்த சுமுகமான கலந்துரையாடல். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் (அமைச்சர்) எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. என்னை தொடர்பு கொண்டு வினவினார். அதனை நான் கோரிக்கை என்றே கூற வேண்டும்.. அது எனது வழமையான சொற் பிரயோகம்.

குறித்த நபர் அவருடன் வேலை செய்திருந்த உயர் அதிகாரி ஒருவரின் மகன். அதனால் கொஞ்சம் இது தொடர்பில் ஆராயுமாறு கூறினார். அது தவிர எச்சந்தர்ப்பத்திலும் அமைச்சரோ வேறு அரசியல்வாதிகளோ, அரச அதிகாரிகளோ எனக்கு இன்று வரையில் கைது செய்வது அல்லது கைது செய்தோரை விடுவிப்பது தொடர்பில் அழுத்தம் கொடுக்கவில்லை…” எனத் தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

Related posts

நாளை தினத்திற்கு பின்னர் காலநிலையில் மாற்றம்

சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரிக்க புதிய பொலிஸ் பிரிவு- ஜனாதிபதி அதிரடி