(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பகல் 2 மணி அளவில் தெரிவுக்குழு கூடவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் இன்று தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜராக உள்ளனர்.