வணிகம்

சர்வதேச ரீதியில் தேயிலையை மேலும் மேம்படுத்த விஷேட கண்காட்சி

(UTV|COLOMBO) இலங்கை தேயிலைக்கு சர்வதேச வர்த்தக சந்தையில் தொடர்ந்து அமோக வரவேற்பு காணப்படுவதாக பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை தேயிலைச் சபை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் விஷேட தேயிலைக் கண்காட்சி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

மேற்படி ரஷ்யா, சீனா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வருடாந்தம் இலங்கைத் தேயிலை ஏற்றுமதி மூலம் 250 கோடி ரூபா வருமானமாகப் பெறப்படுவதாகவும் இலங்கைத் தேயிலை உற்பத்தி, தற்போது அதிகரித்திருப்பதாகவும் மேலும் பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

 

 

Related posts

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019 இல் 5.1 சதவீதமாக அதிகரிப்பு

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

கொரோனாவிலும் தாக்குப்பிடிக்கும் லாம்போர்கினி