சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்புக்காக முப்படையினர் , பாதுகாப்புத் துறையினர் ஆற்றும் சிறந்த சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

(UTV|COLOMBO)  தேசிய அச்சுறுத்தலாக காணப்படும் சட்டவிராத போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்காக முப்படையினர் மற்றும் பாதுகாப்பு துறையினரால் ஆற்றப்படும் சிறப்பான சேவையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராட்டினார்.

திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் பயற்சிபெற்ற அதிகாரிகளை அதிகார சபைக்கு நியமிக்கும் நிகழ்வு, முப்படையின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்றைய முன்தினம் (22) பிற்பகல் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பொருளாதார அபிவிருத்தி போன்றே ஒழுக்கமிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவதற்கும் முப்படையினர் வழங்கும் பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டு தாக்குதலின் பின்னர் நாட்டில் சமாதானம் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படை மற்றும் முப்படையினர் ஆற்றிய ஈடு இணையற்ற சேவையை ஜனாதிபதி பாராட்டினார்.

 

 

Related posts

UPDATE: தற்போது சில பகுதிகளில் மின்சார விநியோகம் – நாடு முழுவதும் மின் தடை!

அவைத் தலைவராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க தீர்மானம்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்