சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 18 பேர் கைது

(UTV|COLOMBO)  திருகோணமலை – பெக்பே மற்றும் உப்பாறு கடற்பரப்புக்களில் வைத்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 18 பேர் கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – பெக்பே பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் இடையே சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர், 4 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

அவ்வாறு பொறுப்பேற்கப்பட்டுள்ள 4 படகுகளில், இரண்டு படகுகள் ஒரே இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 519 கிலோ கிராம் மீன் தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதனுடன் கடற்படையினர், திருகோணமலை – உப்பாறு பகுதியில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 261 கிலோ கிராம் மீன் தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சீன துறைமுக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

இன்று(3) சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்

தனியார் பேரூந்துகளை இயக்குமாறு கோரிக்கை