கிசு கிசு

சூரியன் மறையாத அதிசய தீவு

(UTV|COLOMBO)- ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நோர்வே நாட்டில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாகும்.

ஆர்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருளாகவே இருக்கும். அதேபோல் ஆண்டில் சில மாதங்கள் இதற்கு நேர் எதிரானதாக இருக்கும். அதன்படி தற்போது அந்த தீவில் சூரியன் மறையாத காலம். அங்கு கடந்த மாதம் 18 ஆம் திகதி நள்ளிரவு சூரியன் மறையாத காலகட்டம் ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்த மாதம் 26 ஆம் திகதி வரை 69 நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை மாறியுள்ளது.

தங்களது வழக்கமான நேரத்தைக் கடைப்பிடித்தல் முறைகளிலிருந்தும் விடுபடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களது தீவை உலகின் முதல் நேரமற்ற மண்டலமாக அறிவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

பட்ட பகலில் பத்திரிக்கையாளர்கள் முன்பு லிப் டூ லிப் முத்தம்!

பிரதமர் மாளிகையில் இருந்த எருமைகள் ரூ.23 லட்சத்துக்கு ஏலமா?

இஸ்ரேலை நியாயப்படுத்தும் விமல்