விளையாட்டு

இலங்கை அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

(UTV|COLOMBO)- உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளனர்.

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 27வது போட்டி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸ்இ ஹெடிங்லீ மைதானத்தில் இடம்பெற்றது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று(21) இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது டுவிட்டர் கணக்கில் வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளனர்.

Related posts

கிளிநொச்சியில் தேசிய கயிறுழுத்தல் போட்டி

இம்முறை இலங்கை சார்பில் மில்கா

ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு