சூடான செய்திகள் 1

உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO)- சேவையின் அவசியம் கருதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதி படி குறித்த இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தவிர 04 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 02 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், 04 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

Related posts

கடுவலை முதல் பியகம வரையிலான வீதிக்கு பூட்டு

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்