சூடான செய்திகள் 1

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)- கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் நள்ளிரவு 12 வரையான 15 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் கட்டமைப்பு திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு தெஹிவளை, கல்கிசை ,கோட்டை, கடுவலை ஆகிய மாநகர சபை எல்லை பிரதேசங்களிலும், மஹரகம, பொரலஸ்கமுவை, கொல்ன்னாவை ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை கொட்டிக்காவத்தை, முல்லேரியா பிரதேச சபை பிரதேசங்கள், ரத்மலானை மற்றும் சொய்ஷாபுர ஆகிய குடியிருப்பு தொகுதிகளுக்கும் நீர்விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு பெண் மரணம்!

UPDATE-மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

கொத்மலை சீஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது