(UTV|TURKEY) பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்திரிகையாளர் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, எர்டோகன் கூறுகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சவுதி மன்னர் முகமது பின் சல்மானின் ரகசிய பாதுகாப்பு படையினர் 15 பேருக்கு தொடர்புள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது . ஆகையால் கொலை குற்றத்தில் ஈடுபட்ட சவுதி அரேபிய அரசு குற்றத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.