சூடான செய்திகள் 1

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று

(UTV|COLOMBO) இன்று (21) மோதல் தொடர்பாடல் முகாமைத்துவம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

சிறப்பான ஊடக கலாச்சாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் ஊடகவியலாளர் தொழிற்துறை அறிவு மற்றும் சிந்தனைகளை மேம்படுத்தும் இலக்காக கொண்டு நடைபெறும்.

மேற்படி இந்த செயலமர்வு காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 2 மணி வரை நடைபெறவுள்ளது.

தேசிய ஊடக மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் ஜனாதிபதி ஊடக பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளருமான தினேஷ் தொடங்கொட, பொலிஸ் ஊடக பேச்சாளார் சட்டத்தரணி ருவான் குணசேகர, இராணுவ ஊடக பேச்சாளார் சுமித் அத்தபத்து உள்ளிட்ட சிலர் இதில் உரையாற்றவுள்ளனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Related posts

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள்

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது