கேளிக்கை

ரஜினியுடன் மோதும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை…

(UTV|INDIA) பேட்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார்.ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 2வது கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் படத்தில் ரஜினிகாந்த் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

விரைவில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ரஜினியின் அறிமுக காட்சியில் யோக்ராஜ் சிங் நடிப்பதாகவும், ரஜினியுடன் பயங்கரமான சண்டைகாட்சி அவருக்கு இருக்கிறது என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதோடு ஒரு டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நடிகராக அறிமுகமான யோக்ராஜ் பஞ்சாபி படங்களிலும் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இடிந்து போகும் ஆள் நானில்லை…

ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ் ராக்கை ‘பளார்’ என அறைந்த வில் ஸ்மித் [VIDEO]

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய்