சூடான செய்திகள் 1

மேலதிக பஸ் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானம்

(UTV|COLOMBO) இன்று பிற்பகல் புகையிரத பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டால், 800 மேலதிக பஸ் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது.

வேதனப் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொடர்ந்து பணியாளர்களது தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

புகையிரத தொழிற்சங்களின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

மேற்படி இந்த சந்திப்பில் தீர்வு வழங்கப்படாவிட்டல், பிற்பகல் 2 மணிக்கு பின்னர் திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருப்பதாக புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Related posts

சத்தியக் கடதாசி தொடர்பிலான தீர்ப்பு இன்று

இலங்கை இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்தும்-(VIDEO)

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு