(UTV|SOUTH AMERICA) தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய 2 நாடுகளும் திடீர் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கின.
உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இந்த மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது. மேலும் மின்வெட்டு காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் தொடர்பும் முடங்கியது. இந்த திடீர் மின்வெட்டு காரணமாக 2 நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பிரேசில் மற்றும் பராகுவேயின் சில பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிகிறது.