சூடான செய்திகள் 1

இரண்டு பேர் கைது…

(UTV|COLOMBO)   உணவட்டுன பிரதேசத்தில் வசிக்கின்ற பெண் ஒருவரை கொலை செய்வதற்காக 20 லட்சம் ரூபாவிற்கு ஒப்பந்தம் செய்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெண்ணும், அவருக்கு துணையாக இருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டப் பெண் ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் உள்ளுராட்சி சபை ஒன்றின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அவர்கள் கொலை செய்யப்படவிருந்த பெண்ணின் கணவரே இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி குறித்தப் பெண்ணின் ஒப்பந்தம் வழங்கிய கணவர், வெளிநாடொன்றில் தொழில்புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அரசின் அறிக்கை

சு.கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் நாளை

பேலியகொட பரிமாற்றிடம் நாளை முதல்