விளையாட்டு

பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த இந்தியா

(UTV|COLOMBO) ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணியளவில் மான்செஸ்டரில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கி ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் நல்லதொரு ஆரம்பத்த‍ை பெற்றுக் கொடுக்க இந்திய அணி முதல் 5 ஓவரில் 20 ஓட்டத்தையும், 10 ஓவரில் 53 ஓட்டத்தையும் விக்கெட் இழப்பின்றி பெற்றுக் கொண்டது.

12 ஆவது ஓவரை எதிர்கொண்ட ரோகித் சர்மா அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தையும், ஐந்தாவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தையும் விளாசி மொத்தமாக 34 பந்துகளில் 6 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக அரைசதம் கடந்தார்.

மறுமுணையில் ரோகித் சர்மாகவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் 21 ஆவது ஓவரின் நன்காவது பந்து வீச்சில் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசித் தள்ளி மொத்தமாக 69 பந்துகளில் 3 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

எனினும் ராகுல் 23.5 ஆவது ஓவரில் வஹாப் ரியாஸுடைய பந்து வீச்சில் பாபர் அசாமிடம் பிடிகொடுத்து 57 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் முதல் விக்கெட் 136 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.

 

 

Related posts

இந்தியா அணிக்கு 143 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

உலக கிண்ணத்தில் விளையாடவுள்ள பங்களாதேஷ் வீரர்கள்…

பாகிஸ்தான் T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிதியுதவி நிறுத்தம்