சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும்

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலானபிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று(16) பிற்பகல் மழை பெய்யக் கூடும் என, எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய , சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சில கடற்பிராந்தியங்களில், காற்று மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், கடற்சார் ஊழியர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாரம்பரிய கைவினைக் கண்காட்சி

அரச செலவீனங்களுக்கு ரூ.1,474 பில்லியனை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றில் நிறைவேற்றம்

ராஜிதவுக்கு பிணையில் செல்ல அனுமதி