(UTV|COLOMBO) ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள சுற்றுலா பிரதேசங்களை உள்ளடங்கியதாக ஒரு வைபவம் ஒன்றை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவதற்கான விசேட ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் தலைவர் கிசு கோமிஸ் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் கூடுதலாக வரும் பல நாடுகளுக்கு சென்று ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டமும் ஆரம்பிக்கப்படும். உலக புகழ்வாய்ந்த லோன்லி பிளேனட் சஞ்சிகையின் தலைவரும் இலங்கைகக்கு வரவுள்ளார்.
உலக புகழ்பெற்ற நபரை நாட்டுக்கு அழைத்து இலங்கை பற்றிய சரியான அபிப்பிராயங்களை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்ல எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அபிவிருத்தியை இலக்காக கொண்டு பொது தொடர்பு நிறுவனம் ஒன்றை நடத்திச் செல்வதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)