சூடான செய்திகள் 1வணிகம்

10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்…

(UTV|COLOMBO) சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடமேல் மாகாணத்தில் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்னவினால் ஆளுநர் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் அடுத்த ஆண்டுவரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர் அலுவலகம் உள்ளுராட்சி நிலையங்களின் உதவியுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அரச அலுவலகங்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களில் பயனுள்ள மரக்கன்றுகளை நடும் வகையில் உள்ளுராட்சி நிறுவனங்களினூடாக மரக்கன்றுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நான்கு இலட்சம் மரக்கன்றுகள் வடமேல் மாகாணத்தின் குருநாகல், புத்தளம் மாவட்ட உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

Related posts

அலரிமாளிகையில் எதிர்கட்சி தலைவர்

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலத்தை திறந்தார் ஜனாதிபதி!

பிரபல நடிகர் காமினி ஹெட்டியாராச்சி காலமானார்