சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாளை ஆசிய கலந்துரையாடல்கள், நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் விசேட உரை

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆசிய கலந்துரையாடல்கள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, தஜிகிஸ்தானின் துசான் பே நகரை சென்றடைந்தார்.

இன்று இந்த மாநாடு ஆரம்பமாகுவதுடன் இந்த மாநாட்டில் நாட்டின் பொதுவான விடயங்கள், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதேநேரம், ஜனாதிபதி தமது விஜயத்தின் போது பல்வேறு நாடுகளின் அரசத் தலைவர்களையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

மனுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள் நியமனம்

ஶ்ரீலங்கன் தொடர்பில் கணக்காய்வாளரால் அறிக்கைகள் சமர்ப்பிப்பு…

கொழும்பு அரசியலில் பாரிய மாற்றம்