(UTV|COLOMBO) தேசிய சேவை சங்கத்துடன் இணைந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் காரியாலயத்தில் இன்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.