(UTV|COLOMBO) ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து விஷேட தேவைகளை கொண்ட நபர்களுக்காக வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த இந்த அதிகரிக்கப்பட்ட தொகையானது ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இந்த தீர்மானத்திற்கு அமைய விஷேட தேவைகளை கொண்ட நபர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் தொகை 5000 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சரமரவீர 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைவாக புதிதாக பதிவு செய்யப்படும் 40,000 பேர் அடங்கலாக விஷேட தேவைகளை கொண்ட 72,000 நபர்களுக்கு ஜுலை மாதத்திலிருந்து அதிகரிக்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது.
வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வருடத்தில் 4350 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்று நிருபம் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சுக்கு திறைச்சேரியினால் நேற்று விநியோகிக்கப்பட்டது.