சூடான செய்திகள் 1

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவை

(UTV|COLOMBO) பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் நோக்கிச்செல்லும் பக்தர்களின் வசதி கருதி எதிர்வரும் 14ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அன்றைய தினம் நண்பகல் 12.45ற்கும் 15ஆம் திகதி அதிகாலை 3.30ற்கும் காலை 8.20ற்கும் பகல் 12.45ற்கும் பிற்பகல் 6.10ற்கும் விசேட ரயில்கள் அனுராதபுரம் நோக்கி செல்லவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொசொன் நோன்மதி தினத்தன்று அதிகாலை 3.30ற்கும் காலை 9 மணிக்கும் மாலை 6.10ற்கும் மூன்று ரயில்கள் அனுராதபுரம் நோக்கிப் பயணிக்கவுள்ளன.  இதேவேளை, அனுராதபுரம் அட்டம ஸ்தானங்கள் மிஹிந்தலை, தந்திரிமலை உட்பட புனித பிரதேசங்களுக்கு செல்லும் அடியார்களின் நலன் கருதி சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலையில் இரவு நேர பெரஹர இடம்பெற மாட்டாது. திட்டமிட்ட அடிப்படையில் இம்முறை ஏனைய மத நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.  பொசொன் நோன்மதி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளில் நாளை முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

காமினி செனரத்தின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ பரவல்

ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பம்