(UTV|COLOMBO) 2019 ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரையில் 1 இலட்சத்து 75 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எனினும் சுமார் 25 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டியுள்ளன. இந்த விண்ணப்பங்களை விரைவாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு அவர் பாடசாலைகளின் அதிபர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.