(UTV|COLOMBO) மூன்று பதில் அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
கைத்தொழில், வர்த்தக, மீள்குடியேற்ற, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பதில் அமைச்சராக , பிரதி அமைச்சராக உள்ள புத்திக்க பத்திரனவும்,
.அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய ரவுப் ஹகீம் அமைச்சராக செயற்பட்ட நகர அபிவிருத்தி , நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக லகீ ஜயவர்தனவும்,
கபீர் ஹாசிம் அமைச்சர் செயற்பட்ட நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக அனோமா கமகேவும் சத்தியப்பிரமாணம் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.