சூடான செய்திகள் 1

நாளை முதல் பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO) அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேற்படி அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகும்.

கல்வி அமைச்சின் டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளதுடன் தபால் அலுவலங்களில் இந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டத்தின் கீழ் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர சான்றிதழ்கள் இணையத்தின் ஊடாக வழங்கப்படும்.

வங்கி கடன் அட்டைகள் மூலம் இதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ருகுணு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

சய்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட தாமதம்

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது [UPDATE]