வகைப்படுத்தப்படாத

தலைவர் பதவியில் இருந்து தெரேசா மேய் விலகினார்

பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் புதிய தலைவர் தெரிவுக்கு வழிவிடும் வகையில் அவர் பதவி விலகியுள்ளார்.

எனினும் அவர் புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு பிரதமராகும் வரையில், பிரதமர் பதவியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரெக்சிட் விவகாரத்தில் ஒப்பந்தம் ஒன்றை இணக்கப்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ள நிலையில், தெரேசா மேய் பதவி விலகல் தீர்மானத்தை கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

 

 

Related posts

அமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன

திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்கு

விஜயதாச ராஜபக்‌ஷ விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்