சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிறைவு நிகழ்வு

(UTV|COLOMBO) நாளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் நிறைவு நிகழ்வு  முல்லைத்தீவு பொது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

கடந்த 3ஆம் திகதி தொடக்கம் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் ஜனாதிபதி தலைமையில் நிறைவுப்பெறவுள்ளது.

மேற்படி கிராமசக்தி மக்கள் இயக்கம், எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டம், சிறிசர பிவிசும மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டம், சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய செயற்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டம், போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டம், சிறுநீரகநோய் நிவாரண ஜனாதிபதி செயலணி, உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டம், ஸ்மார்ட் ஸ்ரீலங்கா, சிறிய அளவிலான விவசாய உற்பத்தி பங்குடமை செயற்திட்டம், ஜனாதிபதி தெரிவிக்க செயற்திட்டம், உள்ளிட்ட பல அபிவிருத்தி நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

புத்த பெருமானின் சாரணாத் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

சிறுவர் பூங்கா ராட்டினம் விபத்து-கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்