சூடான செய்திகள் 1

மன்னாரில் கைவிடப்பட்ட நிலையில் கேரளக் கஞ்சாப்பொதிகள் மீட்பு

(UTV|COLOMBO) மன்னார், பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 140 கிலோ 760 கிராம் நிறை கொண்ட கேரளக் கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் நேற்று (06) கைப்பற்றியுள்ளனர்.

பேசாலை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே குறித்த டோலர் படகில் இருந்து கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும், குறித்த படகில் இருந்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்
கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவையும் டோலர் படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உலக நாடுகள் பல கண்டனம்

19 மாணவர்கள் தொடர்ந்தம் விளக்கமறியலில்

வீட்டில் இருந்து பணியாற்றுவது தொடர்பாக அறிவிப்பு