சூடான செய்திகள் 1

உலருணவுப் பொதிகளுக்கான பற்றுச் சீட்டுக்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் – அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்குப் பின்னர் அதுவும் புனித நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இலக்கு வைத்து வன்முறையளார்கள் தாக்குதல் நடத்தியமை என்பது மிகவும் மனவேதனையைத் தருகின்றது. இப்படித் துன்பப்பட்டுள்ள மக்களுக்காக பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவின் மூலமாக நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேவேளை நாங்கள் உலக நாடுகளுக்கு முன் வைத்த கோரிக்கை இணங்க எமது நாட்டின் மீதுள்ள நெருக்கமான உறவின் காரணமாக கட்டார்  நாட்டின் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உலருணவப் பொதிகளை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் மூலமாக வழங்கி வருவதாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர்  எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார் .

கட்டார்  நாட்டின் சமூக சேவை நிறுவனத்தினால் சுமார்  ஐந்து மில்லின் ரூபா செலவில் முஸ்லிம்கள் மீது இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட குருநாகல், புத்தளம், கம்பஹா ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குடுபத்தினர் ஒருவருக்கு தலா ரூபா 3250 விகிதம் இலவசமாக உலருணவுப் பொதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பற்றுச் சீட்டு வழங்கி வைக்கும்  நிகழ்வுகளில் கந்து கொண்ட முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

உலருணவுப் பொதிகளுக்கான பற்றுச் சீட்டுக்களை வழங்கி வைப்பதற்காக மினுவான்கொடை, கொட்டாரமுள்ள, தும்மோதர, ஹெட்டிப்பொல குளியாப்பிட்டிய உள்ளிட்ட 12 பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு அமைச்சர்  ஹலீம் நேரடியாக விஜயம் செய்து வழங்கி வைத்தார். இதில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர் .

 

Related posts

ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

பொது மக்கள் நன்கொடை – வீடுகளுக்கு சென்று வழங்கும் நடவடிக்கை நாளை முதல்