(UDHAYAM, COLOMBO) – நல்லாட்சி அரசாங்கம் நிலைப்பேறான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியை ஆரம்பித்துள்ளதென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையமும், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு மாநாட்டில் நேற்று இவ்வாறு உரையாற்றினார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
புதியதொரு இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கமாக அரசாங்கம் விசேட பொருளாதார திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக முதலீட்டாளர்களுக்கு கவர்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். இலங்கையில் முதலீடு செய்வோருக்கு கூடுதல் சலுகைகளை வழங்க அரசாங்கம் தயாராவிருக்கிறதென இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கொழும்பு பங்குச்சந்தை ஊடாக இலங்கையின் சந்தையில் இணைந்து கொள்ளுமாறு அதன் தலைவர் வஜிர குலதிலக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இதன்போது கோரிக்கை விடுத்தார்.