வகைப்படுத்தப்படாத

மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாக மாறியுள்ள இலங்கை!!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாகியுள்ளதாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

155 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியில் இலங்கை 120 ஆவது இடத்தில் உள்ளதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வானது 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகாலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்? எந்தளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டு உலக மகிழ்ச்சிய அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையில் 2016 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 117 ஆவது இடத்தில் இருந்துள்ளது.

இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மூன்று இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாம் இடத்தில் நோர்வே உள்ளது.

டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் என்பன முறையே 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் இடங்களில் உள்ளன.

மேலும், 14 ஆம் இடத்தில் அமெரிக்காவும், 19 ஆம் இடத்தில் பிரித்தானியாவும், 122 ஆம் இடத்தில் இந்தியாவும் உள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஐ முன்னிட்டு இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

காலநிலை

சாமிமலை ஸ்டொக்ஹம் தோட்ட ஆத்தடிப்பாதை செப்பனிட நடவடிக்கை

Mathematics Tutor among 8 remanded over road rage attack