சூடான செய்திகள் 1

பொசொன் நோன்மதி தினம் – அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை இலவச ரயில் சேவை

(UTV|COLOMBO) இம்மாதம் 13ம் திகதி தொடக்கம் 19 திகதி வரையான காலப்பகுதி பொசொன் நோன்மதி வாரக் காலப்பகுதியாகும்.

அனுராதபுரத்திற்கு இம்முறை 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித பகுதிகளில் வழிபடுவதற்காக வருகை தருமாறு அனுராதபுர மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.எம்.வன்னிநாயக்க பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்படி அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை இலவச ரயில் சேவை இடம்பெறவுள்ளது. தானசாலைகளும் இடம்பெறும். திஸாவெள நீரை குடிப்பதற்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவதனால், அதில் நீராட இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு, அனுராதபுரத்தில் அனைத்து மதுபான சாலைகளும், இறைச்சி விற்பனை நிலையங்களிலும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொசொன் நோன்மதி குழு தெரிவித்துள்ளது.

Related posts

83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது

ஐ.சி.சி யின் தலைவர் இலங்கைக்கு

அவசர தொலை பேசி அழைப்பு சேவை…